அறமே அறம் அறமே அரண்/இலத்தூர் கி.சங்கரநாராயணன்

அறமே அறம் அறமே அரண்
தரமே பார்த்து தர்மம் இடணுமாமே
முரணும் உண்டோ
மூத்தோர் வாக்கில்
அரண் என்றாலே சுயநலமோ?

**************


அறமே அறம்
அறமே அரண்
மரபாய் வந்த
மகத்துவ வார்த்தை
மரக்கனி போலே
மலர்மணம் போலே
எல்லார்க்கும் கொடுத்தால் எழிலே!

**************


அறமே அறம் அறமே அரண்
பலனை நோக்கின்
பயனும் உண்டோ?
சலனம் இன்றி
சாத்தியம் ஆமோ?
கொடுத்ததை மறப்பது
கொடுப்பினையே

***************


அறமே அறம்
அறமே அரண்
நற்சொல் அறமே
நன்மை தருமே
அறம் பெற்றோர்
வாழ்த்தும் வாழ்த்து
குலங்காக்கும் கேடயம் காண்.

**************


அறமே அறம்
அறமே அரண்
தன்னையும் காத்து தக்கோர்க்கு ஈதல்
என்னையும் உன்னையும்
எக்காலும் காக்கும்
அன்னைபோல் வாழ்தல் அருமை.

***********