
என்பா 112
அறமே அறமாம் அறமே அரணாம்
தெரியும் தெரியும்
எனக்கும் தெரியும்
ஒழுங்கு தப்பினால்
அறம் போய்விடும்
ஒழுங்கு தப்பாமல் பார்க்கவேண்டும்
என்பா 113
அறமே அறமாம் அறமே அரணாம்
எல்லோரும் மேடையில்
கூடி கூவினார்கள்
நாடகம் ஆரம்பித்து
நடந்து முடிந்தது
அறமாம் அறமே அரணாம்
என்பா 114
அறமே அறமாம் அறமே அரணாம்
எங்கே ஒருமுறை
சொல்லுங்கள் பார்க்கலாம்
அறமே அறமாம்
அறமே அரணாம்
ஹஹ்ஹா சொல்லி முடித்தாயிற்று
