
1)அறமே அறமாம் அறமே அரணாம்
அறத்தைப் பின்பற்றி அழிந்தவர்கள் கோடி
அரிச்சந்திரனும் அழிந்தான் அறத்தைப் பின்பற்றி
மாயோன் விஸ்வரூபம் கண்டேன்!
2)அறமே அறமாம் அறமே அரணாம்
வாழ்வதற்கும் வீழ்வதற்கும் காரணம் ஆயிரம்
ஏற்றமும் இறக்கமும் இருக்கும் வாழ்வில்
அறமே சத்தியம் கடவுள்!
3)அறமே அறமாம் அறமே அரணாம்
கங்கையும் காவிரியும் கரைகளுக்கு நடுவே
பாவம் தொலைய நதியில் மூழ்கு
அறத்தை ஆள்பவனே ஆண்டவன்!
4)அறமே அறமாம் அறமே அரணாம்
நீதிக்கு தலைவணங்கு ஏனென்று கேள்
குந்தித் தின்றால் குன்றும் கரையும்
தர்மம் தலை காக்கும்!
5)அறமே அறமாம் அறமே அரணாம்
வாழ்க்கை சுவர்க்கமுமல்ல நரகமும் அல்ல
வானம் பார்த்த பூமியே என்கிலும்
பெய்யெனப் பெய்யும் மழை!
6)அறமே அறமாம் அறமே அரணாம்
நிலவிலா வானம் நீரிலா மேகம்
எங்கே பெய்யும் என்று அறியாது
சூல் கொண்ட மேகம்!
