
(21 .04. 2023 அன்று விருட்சம் நடத்தும் 53 வது க தைஞர்கள் நிகழ்ச்சியில் நான் பேசிய டோக்ரி மொழிக் கதை)
எழுத்தாளர்:
வேதராஹி
கதை:
“பால்காக்கும் நோனோவும் “
பால்காக் லடாக்கில் வனத்துறையில் ஏவலனாக பணி புரிந்தவன் .
அங்கு நடந்த ஒரு திருவிழாவில் திபெத்தில் இருந்து வந்த லாமா ஒருவர் திபெத்திய நாய் குட்டி ஒன்றை அவனுக்கு பரிசாக கொடுக்கிறார். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவர்களது
குழந்தையை
நோனோ என்று அழைக்கிறார்கள் .
பால்காக்கும் அந்த நாய் குட்டிக்கு நோனோ என்று பெயரிட்டு ,
அதனை குழந்தை போல வளர்க்கிறான் . அதனை குளிப்பாட்டுவது , முடியை சீராக்குவது , உணவளிப்பது , அதனோடு விளையாடுவது , அதனுடே உறங்குவது , சில நேரங்களில் அதற்கு கதை சொல்லுவதுமாக வாழ்கிறான் .
பணி ஓய்வுக்குப் பிறகு ஸ்ரீநகரில் இருக்கும் அவனது மகன் கோபிநாத் , மருமகள் ரமா , மற்றும் பேரன் கோபாலோடு’ வாழ்கிறான் . கோபாலுக்கு நோனோ ஒரு உயிருள்ள பொம்மை போல் ஆகியது . மெல்ல மெல்ல தீவிரவாதம் அதிகமாக,
ஸ்ரீநகரில்இருக்கும் பண்டிட்கள் ஜம்முவுக்கும் , அமிர்தசரசுக்கும் , மற்ற பகுதிகளுக்கும் புலம்பெயர்கிறார்கள். கோபிநாத்தும் , ரமாவும் , பேரனும் ஜம்மு சென்று விடுகிறார்கள் .
பால்காக் மட்டும் நோனோவோடு
ஸ்ரீநகரில் தன் மூதாதையர் வீட்டில் இருக்கிறான் .
ஆனால் நிலைமை மோசமாகி விடவே எல்லோரும் இவனை ஜம்முவிற்கு செல்லும்படி சொல்கிறார்கள் . இவன் பக்கத்து வீட்டு முஸ்லிம் நண்பரும் ஜம்முவிற்கு சென்றுவிடும்படி சொல்கிறார்.
வேறு வழியின்றி இவன் செல்ல முடிவெடுக்கிறான் .
ஊரடங்கு தளர்த்தப்பட்ட
இரண்டு மணி நேரத்தில் ,
உடனே உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொள்ள முடியாமல் , ஒரு பிரம்பு கூடையில் நாயை மட்டும் எடுத்துக் கொண்டு ஜம்முவிற்கு பஸ்ஸில் சொல்கிறான் .
ஐம்முவில் ஒரு பழைய சிறிய வீட்டில் மகன் கோபால் குடும்பம் இருக்கிறது.
அதே வீட்டில் தொழுவத்தில் நோனோவோடு வாழத் தொடங்குகிறான் பால்காக்.
ஜம்முவில் அது கோடை காலம் .
கோடையின் வெப்பம் இவர்களுக்குப் பழக்கப்படாத ஒன்று .
நோனாவிற்கு வெப்பம் தாங்காமல் உடல்நிலை மோசமாகிறது .
ஒரு நாள் புலம்பெயர்ந்த அகதிகள்
உணவு பெறுவதற்கான அட்டையை பெற
கோபிநாத்தும் கோபாலும் அணிவகுப்பு மைதானத்திற்கு சென்றுவிட, நோனோவின் உடல்நிலை கருதி
பால்காக் போகவில்லை .
லேசாக மூச்சு விட்டுக் கொண்டு நனைந்த கோணிப்பை போல நோனோ படுத்து இருக்கிறது .
பால்கான்கிற்கு
ஓய்வூதியமும் வரவில்லை .
மகன் கோபாலுக்கும் இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை.
வறுமை வாட்டுகிறது .
நோனா வின் உடல் மீது ஐஸ் கட்டிகளை வைத்தால்
ஒரு வேலை அதன் உடல்நிலை சீராகும் என்று நினைக்கிறான் . ஆனால் ஐஸ் கட்டிகள் வாங்குவதற்கு அவனிடம் காசு இல்லை . அப்போதுதான் மருமகள் ரமா ஒரு ரூபாயை கொடுத்து காய்கறி வாங்கி வரும்படி சொல்கிறாள்.
சரி என்று கடைக்குச் சென்றவன் அருகில் இருக்கும் கடையில் ஒரு ரூபாய்க்கு காய் வாங்குவதற்கு பதிலாக சந்தைக்குச் சென்று வாங்கினால் கொஞ்சம் காசு மிச்சப்படுத்தலாம் என்று நினைத்து , சுட்டெரிக்கும் வெயிலில் சந்தைக்கு வேகமாக சென்று
எழுபது காசுக்கு காய்கறி வாங்கிக் கொண்டு பாக்கி முப்பது பைசாவிற்கு ஐஸ்கட்டி கேட்கிறான் .
30 பைசாவிற்கு ஐஸ் கட்டிகள் வராது என்று கடைக்காரன் கோபமாகச் சொன்னாலும் , பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சுகிறான் . கடைக்காரனும் ஒரு சிறிய ஐஸ்கட்டித் துண்டை கொடுக்கிறான். அதைப் பெற்றுக் கொண்டு வெயிலில் வேகமாக வீட்டிற்கு ஓடி வருகிறான் . இவனை பார்த்த மருமகள்
“உங்கள் சட்டை ஏன் நனைந்திருக்கிறது “!….
“ஐஸ்கட்டி வாங்கினீர்களா? “
என்று கேட்க ,
நடந்ததைச் சொல்லுகிறான் .
நாமே வறுமையில் இருக்கும் பொழுது இப்படி பணத்தை திருடி ஐஸ்கட்டியை ஏன் வாங்குவானேன் ? என்று கத்துகிறாள் . அவமானத்தில் கூனி குறுகி போகிறான் . இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு. , ஒரு ஜக்கில் தண்ணீரை எடுத்து ஐஸ் கட்டியைப் போட்டு வேகமாக தொழுவத்திற்கு சென்று நோனோ முகத்தில் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கிறான் .
அங்கு வந்த மருமகள்
” என்ன செய்கிறீர்கள் ?”
“அது எப்பவோ
செத்துவிட்டது .” என்கிறா ள் .
துக்கம் தாங்காமல் அழுகிறான் .
பின் மருமகளைப் பார்த்து நான் திருடவில்லை என்று கதருகிறான் .
ரமா விக்கித்து சிலையாக நிற்கிறாள்,.
இதுதான் கதை
சாதாரண மக்களின் கட்டுப்பாட்டில் இல்லாத புறச்சூழல்/ தீவிரவாதம் , வன்முறை இவற்றால் அவர்களது வாழ்க்கை எப்படி சின்னாப் பின்னமாகிறது என்பதை அழகாக சொன்ன கதை .
மேலோட்டய
மிகப் பார்த்தால், அவ்வளவு துன்பத்திலும் வறுமையிலும் அன்பும் மனித மும் அப்பாவி மனிதனிடம் மேலோங்கி நிற்பதை சொன்ன விதம் அருமை யாக இருப்பதை உணரலாம்.
ஆனால் தீவிரவாதம், அதை எதிர்க்க இராணுவம்,… ஊரடங்கு. இவற்றால் சாதாரண மக்களின் அமைதியான வாழ்க்கை. எப்படி உருக்குலைந்து போகிறது என்பதை ஆசிரியர் நேர்த்தியாக காட்டியிருக்கிறார்.
