
ஒற்றை மெய்யெழுத்தின் ஓசையொன்றும்…ஒருபொருளுக்குள் அடங்கிவிடுவதல்ல….
அவை ஒரு சரணாகதியின்
மெய்யுணர்வாய் இருக்கலாம்…
உடன்பாட்டின் ஒத்திசைவாய்
இருக்லாம்…
கொஞ்சம் அழுத்தி இசைத்தால்
எதிர்ப்பின் பேரொலியாய் இருக்கலாம்…
பயமுறுத்தலின் உச்சத்தின்
வெளிப்பாடாய் இருக்கலாம்…
தானென்ற எண்ணத்தின் அறைக்கூவலாய் இருக்கலாம்….
காதலர்கள் அலைபேசி
உரையாடலில் அலையடிக்கும்
ஆழிப்பேரலையாய் இருக்கலாம்…
ஒரு போருக்கான முன்அமைதியாய் இருக்கலாம்….
ஒருமுத்தத்தின் முணுமுணுப்பாய்
இருக்கலாம்…
குடும்பத்தலைவியின் ஒருகைஓசையாயிருக்கலாம்…
தலைவனின் அதிகாரஅதட்டலாய்
இருக்கலாம்..
ஒரு சம்மதத்தின் முரண்பட்ட
ஓசையாய் இருக்கலாம்…
இணக்கத்தின் இன்னிசையாய்
இருக்கலாம்…
கேள்வியின் கூர்முனையாய்
இருக்கலாம்…
உள்அழும் வலித்தூரலாய் இருக்கலாம்…
வாழ்க்கை தொடக்கத்தின்
சம்மதமாய் இருக்கலாம்…
நீட்டி ஓலித்தால் மறுப்பாய் இருக்கலாம்…
உள்ளடங்கி ஒலித்தால் மன்னிப்பாய் இருக்கலாம்
இணங்கி ஒலித்தால் உடன்பாடாய்
இருக்கலாம்…
தனித்திருந்தால் அழுத்தமாயிருக்கலாம்…
உடன்பட்டால் ஓங்கி ஓலிக்கலாம்…
கவிதைக்குத் தலைப்பாய் இருக்கலாம்….
அவரவருக்குள் சொல்ல இன்னும்
இருக்கலாம்…..
இந்த ஒற்றை மெய்யுக்குள்
உலகை அடக்கலாம்ம்ம்ம்…
