வாசிப்பு‌ /ஆர் வத்ஸலா

தினமும் கீதை படிப்பார்
அப்பா
கபீர் கூறியதைப் போல
கண்ணையும் மனதையும்
பல திசைகளிலும்
அலைய விட்டுக் கொண்டு

புத்துயிர் ஊட்டுவாள்
அம்மா
நான் சோர்வடையும்
போதெல்லாம்

தனது நான்காம் வகுப்பு பாட
புத்தகத்திலிருந்தோ
அல்லது
நேற்று படித்த நாளிதழிலிருந்தோ
ஏதாவது ஒரு விஷயத்தை
பகிர்ந்து கொண்டு

உலக புத்தக தினம்