தேடிப்படிப்போம்/அனங்கன்

பொய்மையில் வாழும் மனிதருக்குப்
புத்தகம் தேவையில்லை….
நல்லபுத்தகம் படிப்பவர் யாருமிங்கு
தன்னைச் சுமப்பதில்லை.

புத்தகமென்றும் தன்னைத்தானே என்றும்
படைப்பதில்லை…
அதைப்படைக்கும் மனிதர்கள்
நிறமென்றால் அஃதொன்றும் தவறில்லை.

எத்தனை எத்தனை புத்தகங்கள்
படிப்பார் மிகவில்லை…
படித்தவன் பண்பு உயர்வென்றும்
சொல்லிடத்
தோன்றவில்லை.

புரட்டப்படாதப் புத்தங்கள் அழகியல்
காணயில்லை….
பெருமைக்கு வாங்கிக் குவிப்பதனால்
அதில்மேன்மைக்கு இடமில்லை.

தாய்மொழி மேலும் வளர்வதற்கு
நூலின்றி வேறில்லை….
அதன் வேரை நீரூற்றி வளர்ப்பதற்குத்
தேடிப்படிப்பதில் தவறில்லை.