நண்பனின் வீடு/ராஜாமணி

ஊரில் இருக்கும் பொழுது
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
நண்பனின் வீட்டுக்கு செல்வேன் .
முன்னறிவிப்பு எதுவும் தேவைப்படவில்லை .
கொஞ்சம் மெலிந்த உடலில் இருக்கும்
நண்பனின் அண்ணா என்னை கண்டதும்
ஓடிச் சென்று சட்டையை
போட்டுக் கொண்டதில்லை.
நான் போகும் நேரம்
காபி . தேநீருக்கான நேரம் அல்ல .
பழையசோறோ,
பக்கோடாவோ எனக்காக
எதுவும் புதிதாக செய்ததில்லை.
குழந்தைகள் கோடு போட்ட சுவரும் ,
கொடியில் உலறும் துணிகளும்
வித்தியாசமாக தெரிந்தது இல்லை .
எல்லாம் இயல்பாகவே இருந்தது/நடந்தது .
இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை .
கண்ணாடி பொம்மையை கையாளுவது போல ,
நட்பையும் உறவையும் கையாள,
முன்னெச்சரிக்கை தேவைப்படுகிறது .