
மகனுக்கு முன்னால் அறிமுகமாகி
அனைத்தும் தாண்டிய அவளோடு கலந்து விட்ட
ஒற்றையடி பாதையென அவளோடு மட்டும் பயணித்து விட்ட
இந்த வாழ்க்கையில்
அழைத்த உடன் சென்று விட்டாள் இரு சக்கர வாகனத்தில் மகனுடன்
சற்றென்று பெய்யும் கோடை மழையென
நொறுங்கி பொலபொலத்துப் போனது
நான் என்னும் வாழ்க்கை
உயிரை மறந்த உடலென என்னால் அவளோடு பொய்யாகச் சிரிக்க முடியவில்லை
ஒவ்வொரு இருசக்கர வாகனப் பயணத்திலும்
அனாதையாக உணர்வதில் இருந்து
என்னால் மீள முடியவில்லை
அன்றாட வேலைகளில் சிரித்துக் கொண்டே சுழன்றபடி இருக்கிறாள்
என்னுள் உடைந்த அவள் பிம்பத்தை என்னால் ஒட்ட வைக்கவே முடியவில்லை
ஏனோ, அவள் இருந்தாலும் தனிமையில் நான்
