சபையறிதல்


ஆர்க்கே

அரங்க வாயிலிருந்து
என்னை அழைத்துச் சென்றீர்கள்.

இன்முகமாய் இருக்கை காட்டி
அமரச் செய்தீர்கள்.

மாமன்னர்கள், பேரரசர்கள்,
மன்னர்கள்.
புடைசூழ்ந்த மந்திரி பிரதானிகள்
எல்லாமே பெருந்தலைகள்

சபை துவங்கியது.
சத்தமும் தர்க்கமும் முழக்கமும்
சொற்களாய் இறைந்தன.

எதற்காக அழைக்கப்பட்டேன்
என்ன செய்யணும் நான்
எனப் புரியாமல்
என் ஆசனத்தில் அமர்ந்திருந்தேன்–
என் வார்த்தைகளை
ஒரு மௌனக்குவளையில்
வடிகட்டி வைத்துக்கொண்டு.!

2 Comments on “சபையறிதல்”

  1. கவிதையை விமர்சிக்கும் அளவுக்கு அடியேனுக்கு அறிவு இல்லை.
    ஆனால் உனது புகைப்படம் மிகவும் அருமை. அது என்ன யாரையும் ஈர்க்கும் ஒரு புன்னகை.

  2. வார்த்தைகளை மௌனக்குவளையில்
    வடிகட்டி வைத்துக்கொண்டு….
    நல்ல ஒரு சொல்லாட்சி! அருமை… ஆர். கே! அசத்துறீங்க. வாழ்த்துகள்!

Comments are closed.