போடா../ப.மதியழகன்


இது என் வீடா
அதே மனிதர்கள் தான்,
வீடு
என்னப்பா இது
ஒண்ணும் புரியலை
போவதும் வருவதும்
வருவதும் போவதும்
எதற்கு
ஊஹூம் ஒன்றும்
முன்ன மாதிரி இல்லை
இருப்பு கொள்ளவில்லை
அரைப் பைத்தியம்
போதாக்குறைக்கு
இது ஒண்ணுதான் குறைச்சல்
விட்டேனா பார்
என்பதெல்லாம் மலையேறிவிட்டது
அது இல்லாவிட்டால் இது
உனக்கு திருப்பதியா
எங்களுக்கு திருத்தணி
இரண்டும் மலைதானே
போனால் போகட்டும் போடா
உலகுக்கும் உனக்கும்
என்ன சம்பந்தம்
இருப்பதற்கும் போவதற்கும்
இடையே தான் எல்லா கண்றாவியும்
எது பகல் எது இரவு
எல்லாம் நிழல் பிம்பம்
வரும்போகும்!