
மலைகளின் நெகிழ்வுகளில் படர்ந்த அந்தப்பனித்தழுவிய் ஓடையொன்றின் சில்லென்ற நீண்ட நெடுங்கதையொன்று இதயம் துடித்தபடி தன்நிலை முனகிக்கிடக்கிறது.
வெள்ளித்தடாகமென மேலிருந்தபடி விழித்திருந்த நிலவின் காதில் இன்னும் காற்று கிழிக்கப்பட்டதைத்தெரிவிக்கமறந்து ஒரு வனாந்திர பாடலொன்று விழுந்துகிடக்கிறது.
வழியெங்கும் லேசான இதயத்தில் சுமந்துவந்த கனத்த கானா ஒன்று முழுதாய் கேட்கப்படாமல் தன் கதறலை பூமிக்கு ஒப்புவிக்க புவனம் முழுதும் அந்திமக்கரையில் தலைமூழ்கியபடி.
சிறகுகளின் சிகையென்று சாதாரணமாய் ஒதுக்கிவிடவேண்டாம் அந்த வீழ்ந்த இறகுகளை.அவை ஏகாந்தவெளி சம்சாரத்தில் விதவையாக்கப்பட்ட வானம் பூமிக்கு அனுப்பும் மரணசாசனம்
🌹
