அமைதி/கலாவதி பாஸ்கரன்

காத்திருந்தேன்
பன்னாட்டு விமான நிலையத்தில்
ஊர் திரும்ப !
அருகில் இருந்த தமிழ்
மழலையர் சத்தம் செய்து
விளையாட,
முன் வரிசை மத்திய வயது
தெலுங்குக்காரர் மொபைலில்
ஸ்பீக்கர் போட்டு யூ ட்யூப்
அரசியல் கேட்க,
பக்கத்தில் இருந்த இந்தி ஆள்
போனில் அனைவருக்கும்
கேட்குமாறு வியாபாரம் பேச,
அந்நிய தேசம் செல்லும்
ஜீன்ஸ் பெண்மணி
அம்மாவிடம் மாத்திரை
தினமும் போட்டுக்கொள்
என உரத்து சொல்ல,
சந்தை தோற்றது,
அமைதி விமான நிலையமாம்!