கோடை மழை/வேலாயுத முத்துக்குமார்

பருவமழைக்காலத்தில்

நிரம்பாத ஊர்கிணறுகள்

சற்றும் எதிர்பாராத 

காலத்தில் பெய்த

தொடர் கோடை மழையில்

நிரம்பி வழிந்ததை

வேளார்குளத்துக் குடிகள்

ஊர்க்கதையாகப் பேசித் திரிய

ஆலமரத்தடி ஊமை சுடலை பூசாரியின்

ஆவலாதியெல்லாம் 

மழை இப்படி மண்பூடங்களைக்

கரைத்துவிட்டதே என்பதுதான்