மே தினமே வருக/வே.கல்யாணகுமார்

எட்டிங்கே பன்னிரெண்டு
ஏழுநாளும் உழைக்க..

பட்டிமாடாய் பாட்டாளி
பகலிரவாய் உழைக்க

ஒட்டியதோர் வயிற்றுக்கு
ஒருவேளை உணவுக்காக

மே தினமே வருக.