
வேர்வையும் ரத்தமும்
வேறு வேறில்லை.
சாறு வேறு
சதைக் கனி வேறா?
கோர்வையாய் ஒற்றைக்
குரலை உயர்த்துக.
குவலயமே உனக்கு
மேதின வாழ்த்து.
தேர்க நல்லன.
திறன் மிகுத்திடுக.
தீதினை மாய்க்கத்
திரளும் சிந்தனைப்
போர் வகுத்திடுக.
புதுக்குக பொதுமையை.
பூப்பது பார்வைப் புலனறியாதே
வேரினில் காய்த்து
விளைந்து கிடப்போம்.
யாரும் கேளிர்
யாதும் ஊரெனத்
தேறி நடப்போம்
தின மே வாழ்த்து.
—
