வான்வெளி/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

சற்று மேலே இருக்கிறேன், தரையிலிருந்து

சற்று கீழே இருக்கிறேன்,
ஆகாயத்தில் இருந்து

இடையே என் கடவுச்சீட்டு நீந்துகிறது,வானில்

நான் உட்கார்ந்திருக்கிறேன்
ஜன்னல் பக்கத்தில்

ஆகாயம், நீல நிறத்தில்
அலை அலையாக வெண் பஞ்சுகள்
என்னைப் போன்றே நகர்கின்றன

தரை
பூமி
நிலம்
நீர்
பொருள் இல்லை
இருள் நிறைந்த வெளி
இங்கு வேடிக்கைப் பார்க்க
ஒன்றுகூட இல்லை

2 மே2023, காலை8:03

2