ஹரணி கவிதை

ரயில் வழியனுப்பலுக்குக்
குழந்தைகளை அழைத்து
வரவேண்டாம்..

தாத்தாவென அழும்
குழந்தைக்குத் தெரியாது
அப்பாவிடம் கோபித்துக்
கொண்டு தாத்தா
போகிறாரென்று…

ஒருவேளை ஆயா
இறந்து போகாமல்
இருந்திருந்தால்
தாத்தாவைச் சமாதானம்
செய்து பேரன் அழுகையை
நிறுத்தியிருப்பாள்..

புரியும்..
அப்பா தாத்தாவாகிப்
பேரன் அப்பாவாகும்போது..