கல்யாண்ஜி கவிதை

வீட்டின் பூட்டிய அறையினுள்
வெள்ளி நிலாப் பிறை எப்படி?
காட்டுக் குதிரைகள் இடுகிற
கனைப்பொலி கேட்பது எப்படி?
இழுத்துச் சாத்திய கதவினுள்
எப்படிப் பச்சைக் கனவுகள்?
பழுத்து உதிர்ந்த சருகுகள்
பாட்டுப் படிப்பது எப்படி?
தண்ணீர்க் கரையெதும் இன்றியே
தாழை மணப்பது எப்படி?
எண்ணம் பிறழ்ந்தவன் சித்திரம்
இப்படிக் கூத்துகள் ஆடுமோ?

One Comment on “கல்யாண்ஜி கவிதை”

Comments are closed.