
நான்குவழிச்சாலை விரிவாக்கத்தில்
மூடப்பட்டது பாழுங்கிணறு
காலமாற்ற அடர்கொதிநிலை
தார்பூச்சில் கூடவே தூர்ந்துவிடும்
நிறைமாதசூலி தற்கொலை
செய்து கொண்டதும்
அதுசார்ந்து காலகாலமாக உலவிய
அழிப்பாங் கதைகளும்

நான்குவழிச்சாலை விரிவாக்கத்தில்
மூடப்பட்டது பாழுங்கிணறு
காலமாற்ற அடர்கொதிநிலை
தார்பூச்சில் கூடவே தூர்ந்துவிடும்
நிறைமாதசூலி தற்கொலை
செய்து கொண்டதும்
அதுசார்ந்து காலகாலமாக உலவிய
அழிப்பாங் கதைகளும்