ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 30

31.10.2021 – வெள்ளி

 அழகியசிங்கர்

மோகினி :  திருப்தியாக இருக்கிறதா?

அழகியசிங்கர் : திருப்தியாக இருக்கிறது.  இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் எனக்கு ஞானக்கூத்தன் குறித்து எழுத சாகித்திய அக்காதெமி ஒரு வாய்ப்பு கொடுத்து அதை வெற்றிகரமாக முடித்து உள்ளேன்.

ஜெகன் : இந்தப் புத்தகம் தயாரிக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள்.

அழகியசிங்கர் : ஒரு வருடம் எடுத்துக்கொண்டேன்.

மோகினி :   ஞானக்கூத்தனை முழுவதும் வாசித்திருப்பீர்கள்?

அழகியசிங்கர் : முழுவதும் வாசித்தேன். 

ஜெகன் :  கவிதைகள் கட்டுரைகள் என்று.

மோகினி :  தமிழில் முக்கியமான கவிஞர்.

ஜெகன் : அதை மொழிபெயர்த்தவர் யார்?

அழகியசிங்கர் : அதில் சந்தேகம் இல்லை.  கிட்டத்தட்ட 170 பக்கங்கள் வரை வந்திருந்தது. 

மோகினி : அதில் 128 பக்கம் வரை குறைத்துள்ளேன்.

ஜெகன் : கொஞ்சம் கஷ்டமாக இருந்திருக்கும்.

மோகினி : உண்மைதான்.

அழகியசிங்கர் : ஆரம்பத்தில் தென்பட்ட கவிதையின் போக்கு ஞானக்கூத்தனிடம் மாறி விட்டது.

மோகினி :  ஞானக்கூத்தன் கவிதைகளை ஒரு கெயிட் புத்தகம் மாறி வாசிக்க வேண்டும்.

ஜெகன் : நிச்சயமாக.

அழகியசிங்கர் :  ஞானக்கூத்தன் புத்தகத்தில் ஒரு முக்கியமாக விஷயத்தைச் சேர்த்தேன். அவருடைய பிறந்த வீடு, அவருடைய ஓவியம், அவருடைய கையெழுத்து புத்தகத்தில் கொண்டு வந்தேன்.  இதுவரை எந்த இந்திய இலக்கிய சிற்பிகள் புத்தகத்தில் இது மாதிரி இல்லை.

மோகினி :  இந்தப் புத்தகம் மற்ற மொழிகளில் வந்தால் நன்றாக இருக்கும்.

அழகியசிங்கர் :  ஆமாம்.

ஜெகன் : இன்று போதும்.

மோகினி : நம் சபையைக் கலைத்து விடலாம்.

அழகியசிங்கர் : நல்ல இரவு மலரட்டும்.