மலருக்கு மலர் தாவும்/சுரேஷ் ராஜகோபால்

(12/05/2023 மாலை கவிதை வாசிக்கலாம் வாங்க-3 ல் வாசித்த கவிதை)


பூக்கள் அருகில் வந்து, வண்டு
ரீங்காரமிட்டு, வளைய வருமே
அதன் வாசத்துக்கு அவை வரவில்லை
தேன் தேடித்தான் வந்தன
தேன் குடித்து மகிழ்ந்தன.

பூக்கள் இலவசமாக மகரந்தத்தை
அதன் உடலில் ஓட்டிவிடும்
சுயநலத்தில் தேன் தந்திடும்
விவேகத்துக்குக் குறைவில்லை
அதன் இனம் தழைக்கவே யுக்தி.

காலை முதல் மாலை வரை
நடக்கும் சேட்டை
மலருக்கு மலர் தாவி
மகிழ்ந்திடும், உண்டு களித்திடும்
வனம் செழித்திடும் நன்றாய்.

மலருக்கு மகரந்தம் கிடைத்தும்
மலர் காயாகும், கனியாகும்
கனியிலே விதையிருக்கும்
விதை விழுந்த மண்ணிலே
அதன் இனம் முளைத்திடும்
வனம் தழைத்திடும் நன்றாய் .