அன்னையர் தினம்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

பெயரிட்டார் பெருந்தகையார்
ஆண்டுக்கு
ஒரு நாள் இதற்கிதற்கு
என்று.
ஏனென்று கேட்டதில்லை,
விழா
வாழ்த்து குறைவும் இல்லை.

வண்ண வண்ண அட்டைகள்
விதவித
வாசகங்கள் அலங்கரீக்க.
வாங்கித்
தந்த காலம் போயே போச்சு.

அணிமணி பரிசு தந்து
எதிர்பாராது
அசத்திய விந்தையும் போனது.

மனமெலாம் எங்கோ இலயிப்பில்
இருந்தாலும்
எந்திர கதியில் ஆயிரம் மைல்
தள்ளி
இருக்கும் அன்னைக்கு
அலைபேசியில்
குறுஞ்செய்தி விரல்கள்
அனுப்பும்.
புலனமெனும் தகவல்
களஞ்சியம்
நினைவூட்டும்.

மணியோசை கேட்டு மலர்ந்து
அன்னையவள்
முகவானில் விழிமேடை
ஒளிரும்.