
அந்த நாள்
ஞாபகம் வருகிறது
அம்மா
எங்களை விட்டுப்
பிரிந்த நாள்
அப்போது அம்மாவின்
வயது
இப்போது
என் பெண் வயதை
விட
சிறியவளாக
இருந்திருப்பாள்
அந்த வருடம்
தீபாவளிக்கு
அடுத்த நாள்
முடிந்தது
தீபாவளி அன்று
தீபாவளியை அங்குக்
கொண்டாடினோம்
உற்சாகமான கொண்டாட்டமில்லை
ஒவ்வொரு வருடமும்
தீபாவளிக்கு அடுத்தநாள்
புகைப்படத்தில் அம்மா
என் வீட்டில்
சிரித்துக் கொண்டிருப்பாள்
