ஹாலின் நடுவே வட்ட மேஜை
அதன் மேல் பெரிய வட்டக் கேக்
எரியும் ஏழு மெழுகுவர்த்திகள்
சீனு கையில் பிளாஸ்டிக் கத்தி
ஊதி ஊதி நெருப்பை அணைத்து
பிளாஸ்டிக் கத்தியைக் கையிலெடுத்து
கேக்கை வெட்டித் துண்டங்களாக்கி
ஒரு துண்டை தாத்தா வாயில் போட
“நீ பிறந்தவுடனே ஆஸ்பத்திரியில்
உன்னைப் பார்த்த நினைவு
இப்போ எனக்கு வருது” என்று
தாத்தா சொன்னார் பேரனை அணைத்து
கொழுகொழு கன்னமும் கருகரு முடியும்
இப்பவும் எனக்கு நினைவில் இருக்கு
என்று சொன்னாள் அவனின் பாட்டி
கேக் துண்டத்தை வாங்கியபடியே
குச்சி குச்சி யாய்க் கையும் காலும்
நினைவில்என்றும் நீங்காதென்
றனர்
அருகில் நின்ற அத்தையும் மாமாவும்
அப்பாவும் இவற்றை ஆமோதிக்க
அம்மாவுக்கு மட்டும்
நினைவுக்கு வந்தது
அந்த நாளின்
பிரசவ வலியும்
