
கோபுரத்தின் கீழ் புள்ளியாய்
குறுகிப் போன நிதர்சனம்
ஆண்டவன் ஆலயம் தரும்
அடிக்கோடிட்ட பாடம்
நான் யார் என்னும்
நச்சரிக்கும் கேள்விக்கு
நாளெல்லாம் பதிலாக
நானூறு விஷயங்கள்
பெயரா,உருவமா,
பதவியா,பணபலமா,
அழகா,அலங்காரமா,
ஆதிக்கமா,ஆஸ்தியா
பட்டியல் போடும்
பணிவில்லா அகங்காரம் !!
ஒரு நூறு வருடத்தில்
பஸ்பமாய் போகும் உரு !!
நிலைத்திருக்கும் பிரபஞ்சம்
நிறைந்திருக்கும் இறையருள்
கோபுரமாய் உயர்ந்திருக்கும்
இந்த உண்மை சத்தியம் !!

கிரிஜா ராகவன் கவிதை அருமை. ஆண்டவன் சன்னிதி மனதுக்கு நிம்மதி