
இதயத்தில் பாயும்
இரத்தம் அவள் – தான்
சிந்தும் வியர்வை புறந்தள்ளி
முந்தானையில் நம் முகம் துடைப்பாள்.
விழி அசைவை பார்த்து நம்
வலி உணர்வாள்.
வெளியே இயங்கும் நம் மூளை அவள்.
நம் கை அளைந்து விளையாடி இறைந்த
சோறுதான் அவள் வயிறு நிறைக்கும் அமுது.
நம்மில் தன்னை காணும்
அரிய பிறவி.
கல்லை கண்டு தெய்வம் கண்ட
சிற்பி அவள்,
நம்மை நாமாக
வார்த்தெடுத்தாள்.
சிறிய வார்த்தை-
பெரிய அர்த்தம்.
மிகவும் சொற்பம்-
அதிக மதிப்பு.
தன்னிலை மறக்கும்-
முன்னிருப்பே அறியும்.
வரைமுறை தெரியாது-
குறை இருப்பதும் உணராது.
நிறை என்பது அடையும்
முன்னே கிள்ளி கிள்ளி பகிர்ந்து விடும்.

படிக்கும் பொழுது என் கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்தன. அம்மா ❤️🙏🏻
அம்மாவுக்கு ஈடு இல்லை சொல்ல…