இந்த வெயிலில் வெளியேவேண்டாம்/சசிகலா விஸ்வநாதன்

கவிதை-1

இந்த வெயிலில் வெளியே
வேண்டாம்;

இந்த மழையில்
வெளியே வேண்டாம்;

விவசாயி என்னதான்
செய்வான்; அவன்

பிழைப்பு வெயிலிலும் மழையிலும்.

கவிதை-2

இந்த வெயிலில் வெளியே வேண்டாம்;

காகம் புறா இரை தேடும்

ஆவினம் மேய்ச்சல்
போகும் நேரம்

மனிதன் முடங்கட்டும், வீட்டில்.

கவிதை3

இந்த வெயிலில் வெளியே வேண்டாம்;

வெப்ப வெளி சிசுவாய்
பிறந்து..

நிழல் தவம் வேண்ட; நம்மை,

வைகாசி மாரி அணைக்கும்.‌

கவிதை-4

இந்த வெயிலில் வெளியே வேண்டாம்

அரசு அலுவல் நேரம் இதுவே..

வங்கி அலுவல் நேரமும் இதுவே…

வெளியே போக வேண்டியதே!

கவிதை-5

இந்த வெயிலில் வெளியே வேண்டாம்.

இளநீர்காரன், நுங்கு விற்பவன் கரும்பு சாறெடுப்பவன்

ஐஸ்கிரீம் அண்ணன்
இவர்கள், என்னை

எதிர்பார்த்தல்வோ கடை விரித்துள்ளார்கள்!

2 Comments on “இந்த வெயிலில் வெளியேவேண்டாம்/சசிகலா விஸ்வநாதன்”

Comments are closed.