உலக உயர் இரத்த அழுத்த நோய் விழிப்புணர்வு நாள் 2023/ரேவதி.ஆர்

உலக உயர் இரத்த அழுத்த நோய் விழிப்புணர்வு நாள் 2023

“விழிப்புணர்வு குறிக்கோள் :’Measure your BP accurately , Control it. Long Live’

அதாவது ‘இரத்த அழுத்தத்தைத் துல்லியமாக கணக்கிட்டு கட்டுப்படுத்தி நீடித்து வாழ்வோம்’ இதுவே இந்த வருடத்தின் World Hypertension Day (உலக உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு தினம்) இன் குறிக்கோள்.

BP பெரியவர்களுக்கான பாதிப்பென யார் சொன்னது ?

*
இரத்தம் அழுத்தம் எனும் ‘வார்த்தையை அனைவருமே பழகுவோம்’.
தனக்கு ப்ளட் ப்ரஷர் கூடுதலாக இருப்பதைப் பற்றி அறியாதவர்களுக்கும் , அறிந்துகொள்ள சோம்பல் படுபவர்களுக்கும் விழிப்புணர்வு தரக்கூடிய உந்துதல் வார்த்தையாக இது இருக்கும்.

*
நமக்கே கூட இத்தனை வருடங்களில் ஒரு பிபி பார்க்க நேரமில்லாமல் அல்லது மனமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்து இருப்போம் ; இது தவறான செயல். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? முதலில் நம் ரத்த அழுத்தத்தைக் கண்டறிந்து கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

  • இரத்த அழுத்தமானது மற்ற பாதிப்புகளைப் போன்று அறிகுறிகள் ஏதுமற்று சாதாரணமாக வருவதால், நாமே முன்சென்று பொதுவான ஸ்க்ரீனிங் மூலம் தெரிந்து கொள்வது நலம்.
  • நோய் பாதிப்பு என்றாலே அது வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என நாம் எண்ணுவதுண்டு. ஆனால் அது தவறு. இரத்த அழுத்தம் வயதானவர்களுக்கு மட்டுமல்ல ;
    இளைஞர்களுக்குமான பாதிப்பு ; அதுவும் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி வரக்கூடியது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருமே அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கி வரும் தொற்றாநோய் பிரிவுகளில் தினசரி ப்ளட் ப்ரஷர் ஸ்க்ரீனிங் செய்து கொள்ளலாம்.
  • குழந்தைகள் முதல்
    பெரியவர்கள் வரை ..

கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காகவும் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டியும் இருந்த குழந்தைகள் பெரும்பாலானோர் இந்த ‘பப்ஜி’ ‘ ஃப்ரீ ஃபயர்’ போன்ற கேம்களில் அடைக்கலமாகி விட்டதைக் கொரோனாவின் சாபம் என்று தான் சொல்ல வேண்டும் ; தடை செய்யப்பட்ட சைனா வெர்ஷன் கொரியன் வெர்ஷன் என்று தாவித் தாவி ‘Hit him’ ‘Kill him’ என்று கத்திக் கொண்டே அதிகரித்த இதயத் துடிப்புகளோடு குழந்தைகள் விளையாடும் ஆட்டங்கள் அவர்களையும் இந்த பேராபத்தில் பாரபட்சமின்றி தள்ளி விடும் அபாயமிருக்கிறது.

  • ஆண் பெண் இருவருமே ப்ளட் ப்ரஷர் நோயால் சம விகிதத்தில் பாதிக்கப் படுகின்றனர்.
  • நீண்ட கால அதிக இரத்த அழுத்தமானது இதயத் தமனிகளை பாதித்தும் , சிறுநீரகங்களைப் பாதித்தும் , மாரடைப்பு மூலமாகவும் இறப்பிற்கான காரணமாக அமைகிறது.

*
ஒரு சிலருக்குத் தாங்க முடியாத தலைவலி , தலைசுற்றல் , வாந்தி , மங்கலான பார்வை , தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

*
முன்பெல்லாம் பெண்கள் அழுது அவர்களது உணர்வுகளை வடித்து விடுவதால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்ற கருத்து நிலவி வந்தது. இப்போது பெண்களுக்கு அழுவதற்குக்கூட நேரமில்லை. ஆண்களுக்கு நிகராக பெண்களும் ப்ளட் ப்ரஷர் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மையான தகவல்.

*
ஆண்களுக்கானாலும் சரி ; பெண்களுக்கானாலும் சரி தொடர் உயர் இரத்த அழுத்தம் பாலியல் வறட்சியை உண்டு பண்ணுவதாகவும் கண்டறியப் படுகிறது.

வாழ்வியல் முறை மாற்றங்கள் (Lifestyle modification) மட்டுமே உயர் இரத்த அழுத்தத்திலிருந்து தற்காத்துக் கொளவதற்கான ஒரே வழி.

 * ஒரு நாளைக்குக் குறைந்தது 8 மணிநேர தூக்கம்.

  * தினமும் 20 நிமிடங்களுக்குக்    குறையாமல் மிதமான உடற்பயிற்சி.

  * தண்ணீர் உள்ளிட்ட நிறைய திரவஆகாரங்கள் உட்கொள்ளுதல்.

  * பழங்கள் காய்கறிகள் என நார்ர்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுவகைகளை உட்கொள்ளல்.

  * அதிக கொழுப்புள்ளவைகளை உணவில் குறைத்தல்.

  * மது சிகரெட் இரண்டையும் தவிர்த்தல்.

  * தேவையில்லாத டென்ஷன்ஸ் குறைத்து மனதை ஒருநிலைப்படுத்த தியானம், யோகா பழகுதல்.

   * ஒருமுறை சுட்ட எண்ணெயை மறுபடி மறுபடி சூடு செய்வதால் உருவாகும் 'Transfat' எனப்படும் கெட்ட கொழுப்பு பேராபத்து. அதனை அறவே தவிர்க்கலாம்.

    *ஒருமாதத்திற்கு நான்கு லிட்டர் எண்ணெய் உபயோகிறீர்கள் என்றால் நான்கும் நான்கு விதமான எண்ணெய் வகைகளாக இருப்பது சிறப்பு. (Eg: நல்லெண்ணை , sunflower oil, safflower oil, rice bran oil, olive oil..)

(4 லிட்டர் என்பதே தவறு. குடும்ப நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. மூன்று நபர்கள் உள்ள குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் ஒன்றரை லிட்டர் எண்ணெய் செலவிடலாம். )

  * முக்கியமாக திட்டமிட்ட உடற்பயிற்சி சாத்தியமில்லை எனில், உடற்பயிற்சியைத் திட்டமிட்டபடி செய்வதற்கென்றே 'நாம் சோர்ந்து போகாமல் தட்டிக் கொடுக்கும் தகுந்த (companion) துணையைத் தேர்ந்தெடுத்து' consistency மாறாமல் தொலையாமல் பார்த்துக் கொள்வது வெகு முக்கியம்.

இந்த எளிய நடைமுறைகளைப் பழக்கப்படுத்திக் கொண்டால் நீங்களும் நலமுடன் வாழலாம்.

புதிய தலைமுறை ஹெல்த் வெளியீடு
நன்றி Jayashri Ananth ❤

https://m.facebook.com/story.php?story_fbid=6217012121725812&id=100002512563301&mibextid=Nif5oz