கிளி பறந்து விட்டது/அழகியசிங்கர்

ஆசை நாயகி கோமள வல்லி மகேந்திர பல்லவனைப் பார்த்து காஷ்மீர் லேக்கில் ஒரு படகு வீடு கட்டச் சொல்கிறாள்.

அவனும் கட்டித் தருகிறான். ஒவ்வொரு மாதமும்
பவுர்ணமி அன்று ஆசைநாயகியைப் பார்த்து அவளுடன் ஒருநாள் முழுவதும் இருப்பான்.
அவளுடன் இருக்கும் பொழுது அற்புதமாக இருப்பதாக உணர்வான். அவளை விட்டு வரும்போது
புத்துணர்ச்சி ஏற்படுவதாகக் குறிப்பிடுவான்.

12 வது பவுர்ணமி அன்று
மகேந்திர பல்லவன் ஆசை நாயகியைப் பார்க்கப் போகிறான்.

வீடு திறந்து கிடக்கிறது. ஆசைநாயகியைக் காணவில்லை.

ஒவ்வொரு அறையாய்ப் பார்க்கிறான். இல்லை. இல்லை.

தலையில் கைவைத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டான்.

ஏனோ கிளி பறந்து விட்டது.
.
.