..

ஓவியம் : உமா பாலு
புத்தர் பெருமான் படகு வீட்டில் தீவிரமாக தவம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய தவம் கலையாமல் இருக்க அவருடைய சீடர்கள் காவல் காத்து வருகிறார்கள். புத்தருக்கு வேண்டாதவன் செங்குட்டுவன். அவர் தவத்தை disturb செய்ய நினைக்கிறான். அந்த ஊரில் பேரழகியாகத் திகழும் கண்ணகியை அதற்காக அதிகப் பணம் கொடுத்து ஏற்பாடு செய்கிறான்.
புத்தர் தங்குமிடத்திற்கு வருகிறாள்.
அவளைத் தடுத்து நிறுத்தும் ஒவ்வொரு சுடனும் பிரமித்துப் போய் மயங்கி மயங்கி வீழ்கிறார்கள்
புத்தர் தவம் புரியும் இடத்திற்குள் நுழைகிறாள் கண்ணகி.
புத்தரை நோக்கி நெருங்கி வருகிறாள்.
புத்தர் கண் விழித்து ஒரு ஷணத்தில் அவளைப் பார்க்கிறார். அவருடைய ஜொலிக்கும் கண்களை அவளால் கூர்ந்து பார்க்க முடியவில்லை.
” வா மகளே…” என்றார் புத்தர்.
அவர் கூறியதைக் கேட்டவுடன் கண்ணகி மயங்கி விழுந்து விடுகிறார்.
