மூன்றாவது கதை

ஓவியம் : உமா பாலு
அந்தப் பத்திரிகையில் வெளிவந்த ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. நான் அந்த ஓவியத்தைப் பார்த்துப் பரவசமானேன். உண்மையில் பித்துப் பிடித்த நிலைதான். உடனே பத்திரிகை அலுவலகத்திற்குப் போன் செய்தேன்.
“வரைந்தவர் முகவரியைத் தர இயலுமா? ” என்று கேட்டேன்.
“உங்களுக்கு எதற்கு?அது மாதிரி கொடுப்பத்ல்லை”
” அவர் வரைந்த ஓவியம் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. அவருக்கு நானும் பரிசு கொடுக்க விரும்புகிறேன்.”
அவர்கள் தயங்கினார்கள்.
“நான் ஒரு எழுத்தாளன். எனக்குத்தான் ஒரு கலைஞனின் அருமை தெரியும்.”
ரொம்ப யோசனைக்குப் பிறகு முகவரி, போன் நெம்பர் கொடுத்தார்கள்.
உடனே அந்தப் பரிசுப் பெற்ற ஓவியர் வீட்டிற்குச் சென்றேன். முன் அறிவிப்பாக போன் செய்து வருகிறேனென்று சொல்லவில்லை. நேரிடையாகப் போய் அந்த ஓவியரை ஆச்சரியப் படுத்த நினைத்தேன்.
சாலிகிராமத்தில் வீடு.
மாலை 5 மணிக்குக்
டூ வீலரில் கிளம்பிப் போனேன்.
அந்த வீடு ஒதுக்குப் புறமாக இருந்தது. போய் கதவைத் தட்டினேன்.
உள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது.
“யார்?”
“நான்தான். ஓவியம் வரைந்தவருக்குப் பரிசொன்று கொண்டு வந்திருக்கிறேன்.”
கதவு மெதுவாகத் திறந்தது. பார்த்தேன்.
11 வயது நிரம்பிய பெண் நின்றிருந்தாள்.
பத்திரிகையில் வெளிவந்த பெயரைக் குறிப்பிட்டு
“அவர்களைப் பார்க்க வேண்டும்,” என்றேன்.
“ஓ..?பார்க்கலாமே..”என்றாள் ஆச்சரியத்துடன்.
அந்தச் சிறுமி, ” உள்ளே வாருங்கள்,” என்றழைத்தாள்.
உள்ளே சென்று அமர்ந்தேன். அந்த வீடு முழுவதும் ஓவியங்கள்.
வீடே கலைக்கூடமாக இருந்தது.
பத்திரிகையில் வெளிவந்த ஓவியத்தை விட சிறப்பான ஓவியங்கள். கண்களைக் கவர்ந்தன.
“சரி. யார் இந்த ஓவியர் நான் பார்க்க வேண்டும்.”
என்றேன் ஆவலுடன். அந்த வீட்டில் அந்தப் பெண்ணைத் தவிர யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
சற்று நேரம் மௌனம்.
“நான்தான் அது,?” என்றாள் அந்தச் சிறுமி.
“நீயா!” என்றேன் ஆச்சரியத்துடன்.
பரிசுப் பொருளைக் கொடுத்துவிட்டு கைக்குலுக்கினேன்.
அந்த வீட்டைவிட்டு வெளியில் வந்த பிறகும் என்னால் நம்ப முடியவில்லை அந்தச் சிறுமிதான் வரைந்திருப்பாளென்று.
அந்த வீடும்? அந்தச் சிறுமியும் புரியாதப் புதிராக எனக்குத் தென்பட்டன.
..
.
”
