அறிவோம்உபநிடதம்/எஸ்ஆர்சி

 

2.கேனோப உபநிடதம்      (கவிதை)

முதல்காண்டம்

என்னுடைய கை கால்கள்

 என்பேச்சு, கண்,காது,

என்னுடைய உணர்வுகள்பலமடைகின்றன

.உபநிடதத்தில்காணும்

அத்தனையும்பிரம்மமே.

யான்பிரம்மத்தை மறுக்காதிருப்பேன்ஆகுக.

பிரம்மம் என்னை

 ஒதுக்காதிருக்கட்டும்

பிரம்மம் வேறுஎங்கும்

மறுக்கப்படாதிருக்கட்டும்

பிரம்மம் எதனையும் ஒதுக்காதிருக்கட்டும்

உபநிடதத்தில் சொல்லப்பட்ட அறங்கள்

என்னில்தழைக்கட்டும்

எனது ஆன்மா மகிழ்ச்சியுறுக

என்னில்அவைஉறுதிப்படட்டும்.ஓம்

மாணாக்கனின் வினா:

நமதுஅறிவை ஒருபொருளின்மீது எப்படிச் செலுத்துகிறோம்?

நம்உயிர் எதன்கட்டளைக்குப் பணிந்து  வினையாற்றுகிறது ?

நாம் யார்கட்டளைப் படிபேசுகிறோம்?

நமது கண்களையும் காதுகளையும் எந்தஅறிவு அதனதன் செயல்களைஆற்றச்சொல்கிறது.?

2.ஆசிரியரின் விடை:

அதுகாதின் காது

அறிவின் அறிவு

பேச்சின் பேச்சு

உயிரின் உயிர்

கண்ணின் கண்.

நான் –என்னும் தன்முனைப்பு நீங்கப்பெற்றால் வெற்றுஉணர்வுகள் வெல்லப்பட்டு ஒரு ஞானி அமரத்துவம்பெறுகிறான்.

3. நமதுகண்கள் பிரம்மத்தைப் பார்க்காது

நமது பேச்சும்அறிவும்

 அதனை அறியாது

அதுபற்றிப் பாடம்சொல்ல

அறியாதவர்கள்நாம்.

இதுகாறும் அறிந்தவைகளில்

 அதுஇல்லை

நமக்குத் தெரியாதவைகளுக்குமே

 இன்னும்அப்பாலுள்ளது அது.

அப்படித்தான் முன்னோர்கள் கற்பித்திருக்கிறார்கள்.

நாம் செவிமடுத்து இருக்கிறோம்.

4. நமதுபேச்சுஅதனை விளக்காது

நாம் பேசுவதை

 அதுவெளிச்சப்படுத்தும்

அது மட்டுமேபிரம்மம்.

மற்றபடி மக்கள்  வழிபடுகிறார்களே

அதுவல்ல அது.

5. நமதுஅறிவுகொண்டு

 அதனைச் சிந்திக்கஇயலாது.

ஆயின்நமது அறிவைச்

 சிந்திக்கவைப்பதுஅதுவே.

அது  மட்டுமே பிரம்மம்

. மற்றபடி மக்கள் வணங்கும்

அதுவன்று அது.

6. நமது கண்களால்

அதனைக்காணஇயலாது

. ஆயின்நமது கண்களை

 அது காணவைக்கிறது.

அதுவே பிரம்மம் என்றுஅறி

. மற்றபடி மக்கள்

 இங்குவணங்கி எழுவதல்லஅது.

7. நமது காதுகள்

 பிரம்மத்தைக் கேட்கஇயலாதன.

ஆயின் நமதுகாதுகளை

 அவைதாம்கேட்க வைக்கின்றன

அதுவே பிரம்மம்  என்பதறிவாய்.

மக்கள் வணங்கிஎழும்

 பிறிதல்லஅது

8. நமது  மூச்சோடு சேர்ந்து

 சுவாசிக்கும் ஒன்றன்றுபிரம்மம்.

நமது சுவாசத்தை இயக்குவதுஅது.

அதுமட்டுமே பிரம்மம்.

மக்கள் வணங்கி வழிபடும் பிறவன்றுஅது.

இரண்டாவதுகாண்டம்

1.ஆசிரியர்: உனக்குநன்றாகத்தெரியும்என்றுசொல்கிறய்அதுஅப்படிஅல்ல..உனக்குத்தெரிந்தஅந்தபிரம்மமும்தேவர்களின் விஷய இருப்பும்கொஞ்சமே. பிர்மத்தைஇன்னும்அறிதல்வெண்டும்.

2.மாணவன்: நான் அப்படிஅதனைத் தெரிந்ததாகஎண்ணவில்லை. எனக்கு அதுதெரியாது என்றும் சொல்லமுடியாது.

நானறிவேன்.எம்மில்அதனை அறிந்தவனே அறிந்தவன்.அறியாதவன்அறியாதவனே.

3. ஆசிரியன்:

 பிரம்மத்தைஅறிந்திலேன்

என்பவன் அறிந்தவன்.

 பிரம்மத்தை அறிந்தனனென்று

நினைப்போன் அறியாதவன்.

தெரிந்துகொண்டேன் என்போன்

 தெரிந்துகொள்ளவில்லை.

அதனை அறியவில்லை

 என்போன்அறிந்தவன்.

4ஒருவனது.உள்ளுணர்வு அறிவிக்கும் அந்தபிரம்மத்தைத் தெரிந்துகொண்டேன் என்பதை..

அப்படிஅறிந்தோன் அமரத்துவநிலை எய்துகிறான்.

சுயபலத்தால் உடல்வலிவமை எய்துகிறான். ஞானத்தால் அவனுக்கு நிலைபேறு உறுதிப்படுகிறது.

5. இவ்வுலக வாழ்விலேயே  அந்தபிரம்மத்தை அறிந்தவன் மனிதவாழ்வின் நிறைவைக்கண்டவன்.

அப்படிஅறியாதவன் அழிவெய்துகிறான்.

பிரம்மம்ஒன்று

 அதுவே அனைத்துபொருட்களிலும்

விரவியிருப்பதைத் தரிசிப்பவன்

வெற்று உணர்ச்சிமட்டுமே வாழ்க்கை

என்பதினின்றும் உதறிஎழுகிறான்.

 அமரத்துவம்பெறுகிறான்

காண்டம் 3

1.ஆசிரியன்:அசுரர்களைவென்றுபடைப்புக்கடவுள்தேவர்களைக்காத்தார். தேவர்களைமீண்டும் உயர்த்திக் காட்டினார்பிரம்மா .அசுரர்களுடன்நடந்தபோரில் வெற்றி பெற்றதற்கும் அவர்கள் புகழ்மீட்கப்பட்டதற்கும் தேவர்களே சொந்தம் கொண்டாடினார்கள். வெற்றியும் புகழும் தமக்குத்தான் என்றுநினைத்துக்கொண்டனர்.

2. அவர்களின் வீண்பெருமையைஅழிக்கபிரம்மா ஒருபாடகனாகஅவர்கள்முன்னேதோன்றினார். தேவர்களுக்கு இதுவிஷயம் தெரியாது

3. தேவர்கள்அக்கினியிடம்பேசினார்கள்: ஜாதவேதனே நீ கண்டுபிடியார் இது நம்முன்னேபுதியதாய் பேராவிபோன்று?

உட்னே அக்கினி அந்தபேராவிமுன்வந்து‘ என்னசெய்தி’ என்றார்.

பிரம்மா(பேராவிஉருவில்): ‘யாரப்பாநீ “

அக்கினி:’நான்தான் அக்கினி. ஜாதவேதன்’.

பிரம்மா:‘ உன்சக்திஎன்ன?  அந்தசக்திஎன்னசெய்யும்?

அக்கினி:பூமியில் எதுஇருந்தாலும் அதனைஎரித்துமுடிப்பேன்.

பிரம்மா:ஒருபுல்லை கீழேபோட்டு ’ இதனைஎரிப்பாய்’ என்றார்.

அக்கினி தனது சக்தி முழுவதும் திரட்டிமுயன்று அப்புல்லை எரிக்கமுடியாமல் தோற்றுப்போனார்.

தேவர்களிடம்  அக்கினி ஓடினார்.’அந்தப்பேராவிஇன்னதுஎன்றுஅறியமுடியவில்லையே’ என்றுபுலம்பினார்.

7. தேவர்கள் வாயுவைஅழைத்தார்கள்.: வாயுதேவா இந்தப்பேராவி இன்னதுஎன்று கண்டுசொல் ?என்றார்கள்.

வாயு பகவான்பேராவி உருவில்இருக்கும்பிரம்மாவிடம்சென்றார்.

பிரம்மா :நீயார் ?

வாயு: நான்வாயு. ஆகாயத்தில்பயணிப்பவன்.

பிரம்மா: உன்சக்திஎன்ன? அதுஎன்னவெல்லாம்செய்யும்?

வாயு: அண்டத்தையேஊதித்தள்ளிவிடுவேன்.பூமியில்இருப்பவைஅத்தனையும்தான்.

10.  பிரம்மா வாயுதேவன் முன்பாக ஒருபுல்லைக்கிள்ளிவைத்து’இதனை’ ஊதித்தள்ளேன்’ என்றார்.

வாயுதன்சக்திஅனைத்தும்கூட்டிமுயற்சிசெய்தார்.அதனை அசைக்கமுடியவில்லை.காத்திருந்ததேவர்களிடம் ஓடினார்.’ அந்தப்பேராவி இன்னதுஎன்றுகண்டுபிடிக்கமுடியவில்லை’ என்றுஒத்துக்கொண்டார்.

11. தேவர்கள்இந்திரனைஅணுகி ’சர்வவல்லமைஉள்ளவனேஇந்தப்பேராவி இன்னதுஎன்றுஅறிந்துசொல்’ என்றனர்.

இந்திரன்;’ சரிஅப்படியேசெய்கிறேன்’

அந்தப்பேராவியிடம்போய்இந்திரன்நின்றான்.

பேராவி உருவில் வந்தபிரம்மாவோ மறைந்து போனார்.

12. இமயவான் புதல்வி உமா அழகானபொன்நிறத்தில் அவ்விடத்தே தோன்றியிருந்தார்.

இந்திரன்கேட்டான்: இதுயார் இந்தப்பேராவி ?

காண்டம் 4

1.குருவாகிய அப்பெண்: ‘ அதுமெய்யாகபிரம்மனே அந்தப்பிரம்மாவின் ஆற்றலினால்தான் நீங்கள் இன்று  புகழோடு இருக்கிறீர்கள்’

உமை அம்மையின் வார்த்தை யினால்தான் இந்திரன்வந்துபோன அந்தப்பேராவி பிரம்மா என்பதைஅறிந்துகொண்டார்.

2.ஆகவே  இந்ததேவர்கள்  அக்கினி வாயு  இந்திரன் ஆகியோர்பிரம்மாவின் மிகஅருகேநெருங்கி இருக்கிறார்கள்.

அப்பேராவி பிரம்மா என்பதைமுதன்முதலில்அறிந்துகொண்டனர்.

3. மற்றதெய்வங்களின்முன் இந்திரன்ஆகச்சிறந்தவன்ஆனான் ஏனெனில்பிரம்மாவைநெருங்கிஅருகிருந்தவன்அல்லவா.  அந்தப்பேராவிபிரம்மன் என முதலில் அறிந்தவன்அவனே.

4. மின்னலின் ஒளிபோன்று ஒளிர்ந்துகண் இமைக்கும்நேரத்தில் மறைந்துபோனார்பிரம்மா. தேவர்களுக்கும் பிரம்மாவுக்கும் இடைஇருக்கும் வித்யாசம்இது.

5 பிரம்மாவுக்கும் நம்உடலில்உள்ள ஆத்மாவுக்கும்இடயிலான ஒப்புமையாதெனில்

மனதால்பிரம்மாவை எண்ணும்வேகத்திற்கும், மனம்ஒருவிருப்பத்தைப் பிறப்பிக்கும் வேகத்திற்கும் இடைஅமைந்துநிற்பதே.

6.எல்லோராலும் வணங்கப்படும் பிரம்மன் தத்வனா எனப்படுகிறது.அனைவரும்அன்புசெலுத்தத் தகுதியானது

ஆகவே அது தத்வனம் என்றாகிறது.

7மாணவன்:  ’குருவே எனக்கு உபநிடதம் கற்பியுங்கள்’

ஆசிரியர்’: உனக்குஉபநிடதம் சொல்லிக்கொடுத்தாயிற்று. நிச்சயமாகவே உனக்கு உபநிடதம் சொல்லிக்கொடுத்தாயிற்று

.பிரம்மத்தைப்பற்றியும்தான்.

8. சுயகட்டுப்பாடு,சுயமாய்த்

தேவையைச்சுருக்குதல்,

 கடமைஎனும் காரியமாற்றுதல்

,எல்லாப்பிரிவுகளுடன்

கூடியவேதங்கள்கற்றல்,

பிரம்மத்தை அறியஆதாரங்கள்.

வாய்மையே

எல்லாவற்றிற்குமான உறைவிடம்.

9.இப்படி அறிபவன்அனைத்துப் பாவங்களையும்தொலைக்கிறான்., ஆனந்தத்தில் நிலைக்கிறான். முடிவில்லாத அருள்வழங்கும் உயர்பிரம்மத்தில் உறைகிறான்.–