
இரவு உறக்கம் தொலைய
போதுமானதாக இருந்தது..
பொதுத்தேர்வெழுதிய மாணவன்
தோல்வி பயத்தில் தற்கொலை
செய்துகொண்ட செய்தி…
யோசனைகளில் களைத்து சுருண்டு
உணவு மறுத்து உற்சாகம் தொலைத்து….
சிரிக்க மறந்துவெறுமையில்
திளைத்து..
இன்னும் கூட. ஏதோவொன்றால்
தன்தவிப்பை வெளிப்படுத்தி.
நேசித்த உறவுகள்
பழகிய மனிதர்கள்
புரட்டிய ஏடுகள்
பார்த்த காட்சிகள்
கற்ற பாடங்களென எதுவொன்றுமே
கைகொடுக்காது மதிப்பெண்களெனும்
முள்வேலிக்குள் சிறைபட்டு சிதைந்துபோன
முகமறியா அவனைப்போல் இன்னும்
எத்தனையோ?
