கடகட கடகட கடகட கடகட/புவனா சந்திரசேகரன்

(1)

கடகட கடகட கடகட கடகட
கவிதை புனையக் கிடைத்தது வாய்ப்பு
முடியுமா உன்னால் இடித்தது மனது
முயற்சித்தால் மின்னலும் கைவசம்

(2)

கடகட கடகட கடகட கடகட
கற்பனை வண்டி சிறுவன் ஓட்டுகிறான்
செலவே இல்லாமல் ஏறலாம் இறங்கலாம்
பயணம் செய்ய பயமெதற்கு?

(3)

கடகட கடகட கடகட கடகட
சகடை சுழன்று நீரை இறைத்தது
கவலை மறந்தது திவலை தெறித்தது
காலச்சகடை சுழன்று கடந்தது !