கடகட கடகட கட கட கடகட/அனங்கன்

(1)

கடகட கடகட கட கட கடகட
கடவென்று கடந்தது இனிய வாழ்க்கை…
காத்திருக்கிறது மாற்ற முடியாத முடிவு…..
இன்னொரு பிறவி வேண்டும்.

(2)

கடகட கடகட கடகட கடகட
கற்பிக்கிறது மனம்…கடக்க
முடியாமலே.
கவித்துவத்தில் நிரம்பவில்லை பாழும் வயிறு.
இன்னும் இருக்கிறது வாழ்க்கை.

(3)

கடகட கடகட கடகட கடகட
கேட்கின்ற செவிக்குள்
தேன் ஊறவில்லை…
நாளும் கடக்கிறது நீளும்
புகைவண்டி.
எனக்கான நிறுத்தம் தொலைவு.

(4)

கடகட கடகட கடகட கடகட
உருளும் மாட்டு வண்டியில்
சத்தம்….
உறங்கவில்லை அவனோடு
சிணுங்கும் மனமும்.
கடையாணி கழண்ட வாழ்வு.

(5)

கடகட கடகட கடகட கடகட
படபட படபட படபட படபட
எதையாவது எழுதித் தொலை
உடனே.
முகவரி உனக்கு எதற்கு…?