
1)கடகட கடகட கடகட கடகட
அச்சாணி கழன்ற வாழ்க்கைச் சக்கரம்
எங்கு போய் கவிழ்த்து விடுமோ
வாழ்க்கைப் பயணம் அப்படி!
2)கடகட கடகட கடகட கடகட
கர்ணனின் தேர்ச்சக்கரம் மண்ணில் புதைந்தது
உதிரம் வழிய கிடந்தான் களத்தில்
புண்ணியத்தையும் தானாமாய் கொடுத்துவிட்டு!
3)கடகட கடகட கடகட கடகட
கடந்து சென்றது கண்ணெதிரே புகைவண்டி
பயணம் செய்பவர்களுக்கு இல்லாத குதூகலம்
கையசைக்கும் சிறுமியிடம் இருந்தது!
4)கடகட கடகட கடகட கடகட
வானத்தில் அர்ச்சுனனின் தேர்ச் சக்கரம்
இடி காதைப்பிளக்க மின்னல் கண்ணைப்பறிக்க
வெட்டியபோது தெரிந்தது விஸ்வரூபம்!
5)கடகட கடகட கடகட கடகட
போர் விமானம் பறக்கும் சத்தம்
அலறியபடி நாங்கள் பதுங்குக்குழியை நோக்கி
கொத்துக் குண்டுகள் காதைப்பிளக்கும்!
