கட கட கட கட கட கட கட கட/கேள்விக்காரன்…

1.கட கட கட கட கட கட கட கட

என்று சிரித்த வில்லன் நடிகர்

சர்க்கரை நோய் உச்ச
வீச்சில்

மேடையில் மயங்கி
விருதாளரானார் !

2.கட கட கட கட கட கட
கட கட

கிடு கிடுத்த இடி வானம்

பொடித் தூறல் தூவல் செய்ததில்

பொடியர் கூட்டம் நாட்டியமிட்டது

3.கட கட கட கட கட கட
கட கட

ஷேர் ஆட்டோ ராட்டின. குலுங்கலில்

மடியில் மடி இடிப் பயணத்தில்

நோய்ப்பிள்ளை பயந்து
கழிந்தது

4..கட கட கட கட கட கட
கடகட

தண்டவாள உருளல் விரைவு ரயில்

திண்டுக்கல் ஜங்ஷன்
நுழைந்து நின்று

மூச்சு ஆசுவாசம் செய்தது

5.கடகட கடகட கடகட
கடகட

தேசீய நெடுஞ்சாலை
தன் தடத்தில்

விரையும் மாட்டு வண்டி
பாய்ச்சலில்

பயந்து ஒதுங்கும்
பேருந்து!

21/05/2023
இரவு மணி : 10:07