
என்பா-1
கடகட கடகட கட கட கடகட
என வானத்தில் இடி இடிக்க,
சட சட சட சட
என மழை தூற்றல்
என்பா-2
கடகட கடகட கடகட கடகட
கட, என அவர் சிரிக்க;
பட பட பட பட
என மனம் துடிக்கிறது.
என்பா3
கடகட கடகட கடகட கடகட;
நான்கு மாடி கட்டிடம் சரிய;
சர் சர் சர் என
வண்டிகள் வந்து நின்றன.
என்பா-4
கடகட கட கட கடகட கட கட;
என பேனா எடுத்தேன், கையில்
மட மட மட மட
என்று தோணியதை
எழுதினேன்.
என்பா-5
கடகட கடகட கடகட கடகட;
என வாய்ப்பாடு என் மகவு ஒப்பிக்க,
பட பட பட என
( 6)
கடகட கடகட கடகட கடகட
என பொங்கும்புனல் தடாகம்;
பேரருவி ஊடுருவும்
வெண் முகிலின் ” “பளிச்”;
ஒளியை வெட்டும்
வானவில்.
(7)
கடகட கடகட கடகட கட
சரளையாய் அருவி
கல் கல்;
என தலையில்
இறங்க, எண்ணைய்
வைத்த தலை பறக்கும்
(8)
கடகட கடகட கடகட கடகட
என ஐந்தருவிக்கு
நடை பயில
பலா சுளை
வாசனை மூக்கைத்
துளைக்க; ஆ! இன்பமது.
(9)
கடகட கடகட கடகட கடகட
என்றே,கம்பூன்றி,
செண்பக அருவி
சேர்ந்து, ஒற்றை
அருவியில், ஏகாந்த
குளியல்; ஒரு ஆனந்தம்!
(10)
கடகட கடகட கட கட கட
என்னாமல்,மெல்லனே,
மெல்லனே, முட்டி
தேய, மேலேறி,
கொம்புத் தேன்
சுவைக்க, குறவனுமேறா
குன்றல்லவா?

Nalla Kavidhai
Nice