
என் கவிதையின் சொற்கள்
தொலைந்து போயின!
தேடியலைகிறேன்
எங்கே தொலைத்தேன்?
சமையலறையிலா?
அலமாரிகளின்
துணிமடிப்புகளிலா?
குழந்தைகளின்
வீட்டுப் பாடங்களிலா?
வங்கியின் கணினியிலா?
பேருந்தின் நெரிசலிலா?
தேடல் தொடர்கிறது!
தொலைத்தது மட்டும்
கிடைக்கவில்லை
இன்று வரை!
என்னையும் சேர்த்தே!
