மூன்றாம் மனிதன்/லாவண்யா சத்யநாதன்

கைப்பேசி ஒலித்ததும்
காதல் பருவக் கடைக்குட்டி
அறைக்குள்
ஒளிந்து கொள்கிறாள்.
யாரழைக்கிறாரென்றால்
யாரோ அழைக்கிறார்களென்கிறாள்.
அவளுக்கு நான்
மூன்றாம் மனிதனாய் தெரிகிறேன்.
ஐம்பதுக்குப் பிறகு
பெண்களுக்கு
புருஷன் புல்லாகத் தெரிகிறான்.
பெண்களுக்கு அபார ஞாபகசக்தி.
ஆசுகவிபோல்
என் மீனாட்சிக்கு
மாதமொருமுறை
என் மீது
குற்றப்பத்திரிகை
ஒப்பிக்காவிட்டால்
தூக்கம் வராது.
அறுபதைக் கடந்த நான்
அம்மாவுக்கு இன்றும்
மனைவிதாசனாகத்
தெரிகிறேன்.
ஒரே நிறுவனத்தில்
முப்பதாண்டுகள்
நான் பணிபுரிந்ததால்
மூன்று வருடத்துக்கு
ஒருமுறை
முப்பது விழுக்காடு
அதிகமாய்
சம்பாதிக்கத் தெரியாத
அசடாக
மகனுக்குத் தெரிகிறேன்.
நெடுநாள் நண்பர்கள்
ஒருநாள் கூடி
கலந்துரையாடினோம்.