நாகேந்திர பாரதி கவிதைகள்

இன்றைய (26.05.2023) நவீன விருட்சம் நிகழ்வில் தலைப்புகளுக்கு நான் வாசித்த கவிதைகள்

பூனை


கண்ணை மூடிக் கொண்ட பூனை
விளக்கை அணைக்கச் சொன்னது
கண் கூசுகிறதாம்

மின்னல்


மின்னல் கீறிவிட்ட கோபத்தில்
மேகம் இடியாய் இடித்தாலும்
கண்ணீர் மழைதான்

கண்ணாடி


கண்ணாடிக்குள் தெரியும் உருவத்தை
திரும்பத் திரும்பப் பார்ப்பதால்
ஏறி விடும் அழகென்ற
எண்ணம் சில பேர்க்கு

தெரு


சில வீடுகளுக்கு
தெரு அடையாளம்
சில தெருக்களுக்கு
வீடு அடையாளம்

வாழ்க, வாழ்க


சாராய போதை
வடியும் வரைக்கும்
அரசியல் மேடைகளில்
வாழ்க, வாழ்க

மெட்ரோ ஸ்டேஷன்


மெட்ரோ ஸ்டேஷன் வழி
பறக்கின்ற ரெயில்களால்
மனிதர்க்கு மகிழ்ச்சி
பறவைகள் பாவம்