மெட்ரோ ஸ்டேஷன்/மதுவந்தி

( 26.05.23 – விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் மெட்ரோ ஸ்டேஷன் தலைப்பில் வாசித்த கவிதை கீழே )

வேக வேகமாய்
வருவதும்
போவதுமாய்
நகரத் தொடரிகள்.
அவை நிற்கிற
சில நிமிடங்களில்
அசையாமல்
அதே இடத்தில்
தாங்கி நிற்கும்
தண்டவாளங்களிடம்
என்னவெல்லாம்
சொல்லிச் செல்லுமோ?

One Comment on “மெட்ரோ ஸ்டேஷன்/மதுவந்தி”

Comments are closed.