
இன்றைய மெய்நிகர் கவிதை அரங்கில் வாசித்த உடனடிக்கவிதைகள்
பூனை
எலிகளை ஒழிக்க
வலைக்கம்பி போட்டீர்
பாலும் நெய்யும்
ஃபிரிட்ஜில் வைத்தீர்
சமையல் அறையை
கச்சிதமாய்ச்சாத்தி
எலிமருந்து
பொட்டலமோ பத்திரமாய்
வைத்தீர்
எலிப்பொறிமட்டும்
வைக்காதீர் அய்யா
பூனைகள் நாங்கள்
எலிகளைப்பிடிக்கவே
ஜன்மம் எடுத்தோம்.
மின்னல்
வானத்தைப்பார்
கருத்தமேகம்
மின்னல்
பளிச்சென்று மின்னுகிறது
மின்னலைப்பார்க்க
ஆசைதான்
மின்னலைத்தவிர்
எல்லோரும் சொல்கிறார்கள்
மானிடம் வாழ்ந்து காட்டிய வழித்தடம்
மூத்தோர் சொல்
பொய்க்காது என்றும்.
கண்ணாடி
கண்ணாடி ஓர் ஆசான்
எனக்குப்பிடித்த பொருள்
நம் முகம் எப்படி
நாம் அறிவதெப்படி
அது அது அப்படிக்காட்டிடவேறு
ஊடகம் ஏது?
நம்மைத் திருத்திக்கொள்ள நல்வாய்ப்பு
நெருக்கமாய்
வழங்குவது கண்ணாடிதானே.
