
“நல்லாப் பாரு.. தெர்தா?”
“அக்காங்.. நீ சொன்னது கரீட்டுதான்..”
“நாந்தா சொல்றேன்ல.. அந்த வூட்ல ரெண்டு மாமரம் பெர்சா ருக்கு..
அங்க போய்ட்டா டெய்லி டெய்லி சாப்பாட்டுக்கு பிரச்சனயே ருக்காதுன்னு..”
“எப்ப போலாம்..”
“இதுக்கென்ன ட்ரைனா புடிக்கணும்..
வா.. இப்பமே ஓடிடலாம்..”
“அப்ப நம்ம பொந்து..”
“நம்ம பொந்துதான் இல்லியே..
மரத்த போட்டு தள்ளிட்டானுங்களே..
இந்த வூட்டையும் இடிச்சிடுவானுவோ..
“ஐயியோ.. இன்னாடா சொல்ற?”
“அங்காங் மே.. அந்தாளு வூட்ட வித்துகினான்..
இங்க இத்த வுட பெரிய வூடு வரப் போவுதாம்..”
“ஆங்.. மெய்யாலுமா?”
“சத்தியமா சொல்றேன்..”
“சரி.. சரி.. அந்தாளும் இவன
மாரியே வூட்ட விக்காம ருக்கணும் மாரியாத்தா..”
“அத்த சொல்லு..”
இரண்டு அணில்களும் அந்தப் பகுதியில் இருந்த
வீடுகளின் ட்ரெய்னேஜ் பைப்களில் ஏறியும்
சன்ஷேடுகளில் ஓடியும் மாடிகளில் துள்ளிக் குதித்தும்
தூரத்தில் தெரிந்த மாமரத்தை நோக்கி ஓடி மறைந்தன.
