விடியலை நோக்கி/விஜயலக்ஷ்மி கண்ணன்

அணில்ப் பிள்ளைக்கு அக்கம் பக்கம் யாரும் இல்லா நிலையில், தன்னுடைய இன்று காலை வரை சொந்தம் கொண்டாடிய கொய்யா மரத்தின் அடையாளம் கூட தெரியவில்லையே என்று கவலை கவ்வி கொண்டதும் ஒரு பட்ட மரம், வெட்டப் பட்டு நிற்பதை பார்த்து பதை பதைத்தது.

தரையில் இருந்து இரண்டு அடி உயரம் விட்டு வெட்டி இருக்கானே பாவி. மரம் காய்த்து,பழுத்தப் பழங்களோடு குலுங்கி நின்றதே. எவன் கண் பட்டதோ என்று சொல்லி சொல்லி வருத்தப் பட்டது.

அடுத்த தோட்டத்ததில் மாமர நிழலிலே என் தாய் உறங்கி விட்டாள். அவளை அப்படியே ஒரு நொடி பொழுதில் பார்த்துவிட்டு அன்று காலையில் பறித்த கொய்யா பழம் கொடுத்துவிட்டு வரலாம் என்று போனால், வருவதற்குள் இந்த அநியாயமா?

துள்ளி ஓடி அந்த இரண்டு அடி உயர பட்ட மரத்தின் மேல் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்ததுவிட்டு பெருமூச்சு விட்டது.
மழை வேறு வரும்போல இருக்கு. ஒதுங்க கூட இடம் இல்லை. இரவு பசித்தால் என்ன செய்ய முடியும்?

இந்த பரந்து விரிந்து கிடக்கும் தோட்டத்தை வெளியூர் வாசி வாங்கி விட்டார் என்று சொல்லி கொள்கிறார்கள்.
நாளை காலை பூமி பூஜை கூட போடப் போகிறதா சொல்றாங்க.
எது எப்படியோ, நம்ம பாடு திண்டாட்டம் தான்.
நரி ,புலி எல்லாம் வருவதற்குள் ஒரு வழியாக திட்டம் தீட்ட வேண்டும்
என்று சமாதானப் படுத்திக் கொண்டது.
மழை வரவில்லை என்றாலும் சிந்தனைச் சாரலில் நனைந்து களைத்து போய் ஓரு முடிவுக்கு வந்தது.
இங்கே கொட்டக்கொட்ட தனியா பசியோட இருக்க முடியாது.
பாவம் தனியாக என் தாய்.அங்கே தாயின் அருகில் போய் அவளோடு இன்று இரவு போக்கிடலாம்.
அதே துள்ளலோடு கட கடா என்று இறங்கி வாழை தோப்பு வழியாக வலம் வந்து தாயின் நிழலில் போய் நிம்மதியாக
உறங்கிவிட்டது., நாளை விடியலை நோக்கி.