இருள் விலக்கும் ஒளி விளக்கு/ஜீவா


(பி எட் மாணவர்)

நான் எண்ணி வியக்கும் ஆசிரியை
நீ என்னை வைத்தாய் உன் அன்புச் சிறையில்!

சாதனையாளரை மிகப் பிடிக்கும்
உமைப் போல் ஆகத்தான் என் மனம் துடிக்கும்
ஆஹா இயல்பாய் இருக்கு உம் செயல்பாடு
எப்படி வந்தது இந்தப் பண்பாடு!

முதல் சரணம்

அன்பால் உருவான நீங்க
புது சரித்திரத்தை உருவாக்குனீங்க!
உங்கள் அன்பால் உருவான நானே
நீர் தந்த அறிவால் நாளை வெல்லப் போறேன்

நாளை வருங்காலம் உம்மால் உருவாகக் கூடும்
மாணவர் சமுதாயம் உமைப் போற்றிப் பாடும்

குருவான நீங்க
எமக்கு இறைவன் கொடுத்த வரமாக நீங்க
நீண்ட நல்வாழ்வு – நீங்கள் வாழ வேண்டும்
நீர் மகிழ என் உள்ளம் தினந்தோறும் வேண்டும்

சரணம் இரண்டு

இருள் விலக்கும் ஒளி விளக்கு
நான் சிறந்தால் புகழ் உமக்கு

சொல்லிக் கொடுக்கும் உம் முறை
என்னைக் கேட்க வைக்கும் மறுமுறை
உம் கவலை எல்லாம் போகட்டும்
இனி வாழ்வே வசந்தம் ஆகட்டும்!

உம் பிறந்த நாள் இது!
என் உள்ளம் உம்மை வாழ்த்திடுது!!

6 Comments on “இருள் விலக்கும் ஒளி விளக்கு/ஜீவா”

  1. புதியவர் எழுதியது என்றால் நம்ப முடியவில்லை. இளம் தளிர் இனிமையான கவிதை உயர்ந்த எண்ணம் உரக்க வாசிப்பு. அருமை.

Comments are closed.