
இயந்திரப் பாம்பு ஒன்று
விரைந்து வந்தது
நகர மின்தொடரி நிலையத்துள் நுழைந்தது
வாயை மூடிக் கொண்டே
வயிற்றை அங்கங்கே திறந்தது
இரைகள் உட்சென்றன;
நான் இரையாகாமல் காத்திருந்தேன்
நண்பனுக்காக.
( 26/05/ 2023 விருட்சம் கவியரங்க நிகழ்வில் அழகியசிங்கர் கொடுத்த தலைப்பில் உடனே எழுதியது )

கற்பனை அற்புதம்.