பிரஸ்னோபனிடதம்/எஸ்ஆர்சி

வினா 1.

ஓம் கடவுளர்களே
நாங்கள் எங்கள் காதுகளால்
புனிதமானவற்றையே கேட்போமாகுக.
வணங்குதற்குரியவர்களே
புனிதமானவற்றையே பார்ப்போம் ஆகுக.
எங்கள் உடலாலும் வலுவான கைகால்களாலும்
இறைவனால் எங்களுக்கு
அளிக்கப்பட்ட வாழ்க்கையை
உங்களை ப்புகழ்ந்து
அனுபவிப்போமாகுக.
சக்திவாய்ந்த பண்டைப்புகழுடைய
இந்திரன் எங்களை
வளமைக்கு இட்டுச்செல்லட்டும்
எல்லா வளங்களையும் வைத்துக்காக்கும்
அவர் எங்களுக்கு நல்லவற்றை அருளுக.
விரைவான இயக்கத்தின் கடவுள்
எங்களுக்கு உதவட்டும்.
பெரியன காக்கும் அவர்
எங்களையும் காக்கட்டும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

  1. உயரந்த ஆத்மாவுக்கு வணக்கம். ஹரி ஓம்

பரத்வாஜன் குமாரன் சுகேசன்,சூர்யனின் பேரன் கார்க்யன்,அஸ்வலாவின் குமாரன் கவுசல்யன்,விதர்பி குமாரன் பரத்வாஜன், காத்யனின் குமாரன் கபந்தி,இவர்கள் அனைவரும் பிரம்மத்தை வழிபடுபவர்கள் உயர்ந்த பிரம்மத்தை விரும்புபவர்கள், கைகளில் சமித்தோடு வணக்கத்திற்குரிய பிப்லாதரை அணுகி அவர் அனைத்தையும் விளக்குவார் என நினைக்கிறார்கள்

  1. இன்னும் ஒரு ஆண்டு ஒழுக்கத்தோடு பிரம்மசர்யம் காத்து, நம்பிக்கையோடு இங்கிருங்கள். பிறகு விருப்பம்போல் கேள்வி கேளுங்கள். எனக்கு விடை தெரிந்தால் அனைத்தையும் உங்களுக்கு விளக்குகிறேன்.
  2. காத்யயன கபந்தினி பிப்லாதரை அணுகி‘ அனைத்து வகையானும் தலைவரே,உயிரினங்கள் எங்கிருந்து பிறக்கின்றன?’ என்றார்.
  3. உயிரினங்களின் கடவுள், வமிச விருத்தி இருக்கவேண்டும் என்று விரும்பினார். தவம் செய்தார். ஜடப் பொருளையும் உயிரையும் ஓர் இணை என உருவாக்கினார். உணவும் உண்பானும் அவ்விதமே. அவை உயிரினங்களை பல வகைகளிலும் உருவாக்கும் என்று எண்ணினார்.
  4. சூரியன் உயிர்
    சந்திரன் உணவு பொருள்.
    அனைத்து உருவம் பெற்றவையும்
    உருவமற்றவையும்
    உணவே ஆகின்றன.
    உருவும் மெய்யாக உணவே.

6.சூரியன் உதித்துக்
கிழக்கே செல்கிறான்.
கிழக்கே அனைத்து உயிரினங்களையும்
கதிரொளியால் நனைக்கிறான்.
தெற்கே, வடக்கே
பாதாளத்திலே உச்சியிலே
இடையிலே உள்ள
அனைத்து உயிரினங்களின் மீதும்
கதிரை வழங்குகிறான்.

7.. இந்த வைஸ்வநரா
என்னும் சூரியன்
அனைத்து உயிரினங்களின் சேர்க்கை.
எல்லா உருவமும் எடுப்பவன்,
எல்லா உயிருமாகுபவன்
நெருப்பானவன்.
தினமும் எழுபவன்.
ரிக் வேதம் இப்படிச் சொல்கிறது.

  1. எவ்வுருவமும் எடுப்பவன்,
    மஞ்சளாய் ஒளிர்பவன்,
    எல்லாம்தெரிந்தவன்,
    பெரிய லட்சியவான்,
    அவன் ஒரு விளக்கு,
    வெப்பம் அருளி,
    ஆயிரம் கதிருடையோன்
    நூறுஉருக்களில் இருப்போன்,
    உயிரினங்களின் உயிரி.
    அவனே சூரியன். அவன் எழுகிறான்.
  2. வருடம் – பிரஜாபதி-
    என்பது உற்பத்திக் கடவுள்
    இரு வழிகள்.தெற்கு வடக்கு என்பன.
    புனிதமான தியாகங்கள் கூடிய
    கர்ம வழி செல்வோர்
    சந்திர உலகை அடைவர்.
    இவண் மீண்டும் வருவர்.
    முனிவர்களில் வமிச விருத்தி
    வேண்டுவோர் தெற்கு வழியை
    பின்பற்றுவர்.

உணவின் இவ்வழி
முன்னோர்களின் வழி.

  1. தவத்தால் பிரம்மசரியத்தால்,
    நம்பிக்கையால், ஞானத்தால்
    ஆத்மாவை அடைந்தவர்கள்
    வடக்கு வழியைத்தேர்ந்து
    பலனடைவார்கள்.
    உயிர்களின் அழிவில்லாத
    அச்சமில்லாத உன்னதமான
    இலக்குடையது அது.
    அங்கு சென்றவர்கள்
    திரும்பி வரமாட்டார்கள்.
    அது பற்றிய செய்யுள் இது.
  2. ஐந்து கால்கள்(பருவங்கள்) கொண்டு பன்னிரு உருவங்களுடைய( மாதங்கள்) தந்தை மழை வழங்குபவன். சொர்க்கத்திற்கும் உயரத்தில் அமர்ந்துள்ளான்.இப்படி முனிவர்கள் சொல்கிறார்கள்
    .பிறர் அவனை எல்லாம் தெரிந்தவன் என்கிறார்கள்.ஒவ்வொன்றும் ஆறு கால்களை உடைய ஏழு சக்கரங்கள் கொண்ட தேரில் இவ்வுலகம் நிர்மாணிக்கப்பட்டு அவன் மீது அமைந்துள்ளது.
  3. மாதம் என்பது பிறப்புக்கடவுள்.
    அதன் இருண்டபகுதி அதன் உணவு.
    ஒளிரும் அதன் பாக்கிப்பகுதி பிராணன்
    .முனிவர்கள் ஒளிர் போதில் யாகம் செய்கிறார்கள்.
    பிறர் இருள் போதில் பணி செய்கிறார்கள்.

13.பகலும் இரவும் படைப்புக்கடவுள்.
பகல் பிராணன் இரவே உணவு.
பகலில் புணருபவர்கள்
பிராண சக்தியை வீணாக்குகிறார்கள்
.இரவில் காதல் புணர்ச்சி செய்வோர்
பிரம்மச்சாரிகள் என்றே கருதப்படுகிறார்கள்.

14.உணவே பிறப்புக்கடவுள்.
அதினின்று விந்து பிறக்கிறது.
எல்லா உயிரினங்களும்
அப்படித்தான் பிறக்கின்றன.

  1. படைப்புக் கடவுளின்
    விதியை க்கடைபிடிப்போர்
    இணையை உருவாக்குகிறார்கள்.
    அவர்களுக்கே பிரம்ம உலகம்.
    தவம் புனிதம் வாய்மை
    அவர்களிடமே தங்குகிறது.
  2. ஏமாற்றாதவன்,
    பொய்யில்லாதவன்,
    தன்னிடம் இல்லாத ஒன்றை
    இருப்பதாய்ச்சொல்லாதவன்
    தூய்மையான பிரம்மலோகம்
    இவர்கட்கே சொந்தம்.