வளவ. துரையன்
மாலைநேர நடை
காலையில் பெய்த மழையால்
தனித்தனியான மனிதர் போலத்
தண்ணீர்த் தேங்கல்கள்
அவசரமாய்க் கூடடைய
அவற்றில் தலையாட்டிக் குளிக்கும்
ஆறேழு காகங்கள்
நாய்கள் போலவே
அலைந்துகொண்டிருக்கும்
நகரத்து மாடுகள்
மழையில் நனைந்ததால்
மகிழ்ந்து சிரிக்கும்
அரளிச்செடி
விமானத்தை
விட்டு விடுவோமோவென
அச்சப்படுவது போல
அதிவிரைவாய் வாகனங்கள்
இவற்றுக்கு இடையே
எந்தக் கவலயுமின்றி
மெதுவாகத் தன்னியல்பாய்
நகர்ந்து போகும் நத்தை ஒன்று

மழை அனுபவம் குளுமையாக இருக்கிறது!
அழகான படிமங்கள் கண் முன்னே ஒரு மழை நேரச் சாலையை கொண்டு நிறுத்துகிறது. மற்ற எல்லாம் இயல்பாய் அதன் போக்கில் இருக்க, மனிதனும், அவன் இயக்கும் வாகனங்களும் ஓடிக் கொண்டே இருக்கின்றன, இயல்பாய் மீறி.